Tuesday, 8 September 2020

nIti SatakaM (Miscellaneous) – नीति शतकं (विविधविषयकाः) – 11– 25


nIti SatakaM  (Miscellaneous) – नीति शतकं  (विविधविषयकाः) – 1125

SlOka 11
EkO dEvaH kESavO vA SivO vA EkaM mitraM bhUpatirvA yatirvA |
EkO vAsaH pattanE vA vanE vA EkA bhAryA sundarI vA darI vA || 11 ||

SivO vA EkaM - SivO vA hyEkaM
vanE vA EkA - vanE vA hyEkA

EkO dEvaH kESavO vA SivO vA EkaM mitraM bhUpatiH-vA yatiH-vA |
EkO vAsaH pattanE vA vanE vA EkA bhAryA sundarI vA darI vA || 11 ||

एको देवः केशवो वा शिवो वा एकं मित्रं भूपतिर्वा यतिर्वा ।
एको वासः पत्तने वा वने वा एका भार्या सुन्दरी वा दरी वा ।। 11 ।।

शिवो वा एकं - शिवो वा ह्येकं
वने वा एका - वने वा ह्येका

एको देवः केशवो वा शिवो वा एकं मित्रं भूपतिः-वा यतिः-वा ।
एको वासः पत्तने वा वने वा एका भार्या सुन्दरी वा दरी वा ।। 11 ।।

One can have one God – Vishnu or Shiva, one friend – a king or an ascetic, one dwelling – a city or a forest, and one wife – a beautiful lady or a cave.
(If one has earthly ambitions he would worship Vishnu the protector, befriend a king, live in a city and marry a beautiful lady. If one seeks liberation from the world, he would take the other options mentioned.)

தேவனென ஒருவனையே கொள்வாய் – கேசவனோ அல்லது சிவனோ; நண்பனென ஒருவனையே கொள்வாய் – அரசனோ அல்லது ஆண்டியோ;
இருப்பிடமென ஒன்றையே கொள்வாய் – நகரமோ அல்லது காடோ;
மனைவியென ஒருத்தியையே கொள்வாய் – அழகியோ அன்றேல் குகை.

குகை – துறவு நிலை

SlOka 12
kamaThakulAcaladiggajaphaNipatividhRtApi calati vasudhEyam |
pratipannamamalamanasAM na calati puMsAM yugAntEpi || 12 ||

kamaTha-kula-acala-dik-gaja-phaNi-pati-vidhRtA-api calati vasudhA-iyam |
pratipannam-amala-manasAM na calati puMsAM yuga-antE-api || 12 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

कमठकुलाचलदिग्गजफणिपतिविधृतापि चलति वसुधेयम् ।
प्रतिपन्नममलमनसां न चलति पुंसां युगान्तेपि ।। 12 ।।

कमठ-कुल-अचल-दिक्-गज-फणि-पति-विधृता-अपि चलति वसुधा-इयम् ।
प्रतिपन्नम्-अमल-मनसां न चलति पुंसां युग-अन्ते-अपि ।। 12 ।।

The earth is held up by the Tortoise, the (seven) principal mountains, the elephants (of the eight directions) and by the serpent king, yet it moves. The promise of pure-hearted men does not move (remains steady) even at the end of the world.

இந்தப் புவி, ஆமை, மலைகள், திசை யானைகள் மற்றும் பாம்பு அரசன் ஆகியோரால் சுமக்கப்பட்டாலும், அது அதிர்கின்றது. ஆயின், தூய உள்ளம் படைத்தோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியம், ஊழிக் காலமாகிலும் அசைவதில்லை.

ஆமை – புவியை சுமந்த விஷ்ணுவின் அவதாரம்.
மலைகள் – புவியை சுமக்கும் ஏழு மலைகள்.
யானைகள் – எண்திசைகளை சுமக்கும் யானைகள்.
பாம்பு அரசன் – ஆதி சேடன் புவியை சுமப்பதாக.

SlOka 13
kiM kUrmasya bharavyathA na vapushi kshmAM na kshipatyEsha yat
kiMvA nAsti pariSramO dinapatErAstE na yanniScalaH |
kiMtvangIkRtamutsRjansvamanasA SlAghyO janO lajjatE
nirvAhaH pratipannavastushu satAmEtaddhi gOtravratam || 13 ||

kiMtvangIkRtamutsRjansvamanasA – kiM cAngIkRtamutsRjanhi manasA

kiM kUrmasya bhara-vyathA na vapushi kshmAM na kshipati-Esha yat
kiM-vA na-asti pariSramO dina-patEH-AstE na yat-niScalaH |
kiM-tu-angIkRtam-utsRjan-svamanasA SlAghyO janO lajjatE
nirvAhaH pratipanna-vastushu satAm-Etat-hi gOtra-vratam || 13 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

किं कूर्मस्य भरव्यथा न वपुषि क्ष्मां न क्षिपत्येष यत्
किंवा नास्ति परिश्रमो दिनपतेरास्ते न यन्निश्चलः ।
किंत्वङ्गीकृतमुत्सृजन्स्वमनसा श्लाघ्यो जनो लज्जते
निर्वाहः प्रतिपन्नवस्तुषु सतामेतद्धि गोत्रव्रतम् ।। 13 ।।

किंत्वङ्गीकृतमुत्सृजन्स्वमनसा - किं चाङ्गीकृतमुत्सृजन्हि मनसा

किं कूर्मस्य भर-व्यथा न वपुषि क्ष्मां न क्षिपति-एष यत्
किं-वा न-अस्ति परिश्रमो दिन-पतेः-आस्ते न यत्-निश्चलः ।
किं-तु-अङ्गीकृतम्-उत्सृजन्-स्वमनसा श्लाघ्यो जनो लज्जते
निर्वाहः प्रतिपन्न-वस्तुषु सताम्-एतत्-हि गोत्र-व्रतम् ।। 13 ।।

Does not the Tortoise suffer pain on his body due to his burden, that he does not throw down the earth? Does not the Sun feel tiredness, that he never stays still? But a worthy man shies away inwardly, from giving up a task accepted (by him.) Carrying on undertaken tasks is the hereditary vow of good people.

புவியை சுமப்பதனால் ஆமைக்கு உடல் வலி ஏற்படுவதில்லையா? அது புவியை விட்டெறிவதில்லையே! பகலவன் இடைவிடாமல் தனது பாதையில் சுற்றுவதினால் தளர்ந்து போவதில்லையா? அவன் நிற்பதேயில்லையே! அங்ஙனமே, மேன்மக்கள், தாம் ஏற்றுக்கொண்ட காரியத்தைக் கைவிட, வெட்குவர். தாம் ஏற்ற பணியினை நிறைவு செய்தல், நன்மக்களின் பரம்பரை விரதமாகும்.

இந்த செய்யுளை, இதற்கு முந்தைய செய்யுளின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.

SlOka 14
kO na yAti vaSaM lOkE mukhE piNDEna pUritaH |
mRdangO mukhalEpEna karOti madhuradhvanim || 14 ||

kO na yAti vaSaM lOkE mukhE piNDEna pUritaH |
mRdangO mukha-lEpEna karOti madhura-dhvanim || 14 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

को न याति वशं लोके मुखे पिण्डेन पूरितः ।
मृदङ्गो मुखलेपेन करोति मधुरध्वनिम् ।। 14 ।।

को न याति वशं लोके मुखे पिण्डेन पूरितः ।
मृदङ्गो मुख-लेपेन करोति मधुर-ध्वनिम् ।। 14 ।।

Who, in this world, does not give in when his mouth is filled with food? The Mridanga produces a sweet sound, when its face (upper side) is smeared (with dough).

வாய் நிறையக் கவளம் கொண்ட யார்தான் உலகில் வசப்படுவதில்லை? முகத்தில் மாவு தடவப்பட்ட மிருதங்கமும் இனிய ஓசை தருமன்றோ!

இச்செய்யுளின் உட்பொருள் – யாரையும் வசப்படுத்த முடியுமென கூறப்படுகிறது.

SlOka 15
kshudrAH santi sahasraSaH svabharaNavyApAramAtrOdyatAH
svArthO yasya parArtha Eva sa pumAnEkaH satAmagraNIH |
dushpUrOdarapUraNAya pibati srOtaHpatiM vADavO
jImUtastu nidAghasaMbhRtajagatsaMtApavicchittayE || 15 ||

nidAghasaMbhRtajagat – nidAghatApitajagat

kshudrAH santi sahasraSaH svabharaNa-vyApAra-mAtra-udyatAH
sva-arthO yasya para-artha Eva sa pumAn-EkaH satAm-agraNIH |
dushpUra-udara-pUraNAya pibati srOtaH-patiM vADavO
jImUtaH-tu nidAgha-saMbhRta-jagat-saMtApa-vicchittayE || 15 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

क्षुद्राः सन्ति सहस्रशः स्वभरणव्यापारमात्रोद्यताः
स्वार्थो यस्य परार्थ एव स पुमानेकः सतामग्रणीः ।
दुष्पूरोदरपूरणाय पिबति स्रोतःपतिं वाडवो
जीमूतस्तु निदाघसंभृतजगत्संतापविच्छित्तये ।। 15 ।।

निदाघसंभृतजगत् - निदाघतापितजगत्

क्षुद्राः सन्ति सहस्रशः स्वभरण-व्यापार-मात्र-उद्यताः
स्व-अर्थो यस्य पर-अर्थ एव स पुमान्-एकः सताम्-अग्रणीः ।
दुष्पूर-उदर-पूरणाय पिबति स्रोतः-पतिं वाडवो
जीमूतः-तु निदाघ-संभृत-जगत्-संताप-विच्छित्तये ।। 15 ।।

There are thousands of petty men, engrossed in activities to maintain themselves. That man alone is the foremost among good people, to whom others’ welfare is his own. The submarine fire drinks the sea to fulfil its insatiable appetite, while the cloud does so only to cease the suffering of the world caused by summer.

தமது தேவைகளை மட்டுமே நிறைவு செய்துகொள்வோர் ஆயிரக் கணக்கில் உள்ளனர். ஆனால், பிறர் நலனே தனது நலனாகக் கருதுவோன் மட்டுமே நல்லோரில் முதல்வனாவான். வடவாக்கனல், தணிக்க இயலா தனது வேட்கைக்காக, கடல் நீரினைக் குடிக்கின்றது. ஆனால் முகில், நீர் கொள்வதோ, உலகோரின் கோடைக் கால வெப்பத்தினைத் தணிக்க வேண்டியே.

வடவாக்கனல் – கடலினடியில் உள்ள பெருந் தீக்கனல் (volcano)

SlOka 16
dUrAdarthaM ghaTayati navaM dUrAtaScApaSabdaM
tyaktvA bhUyO bhavati nirataH satsabhAranjanEshu |
mandaM mandaM racayati padaM lOkacittAnuvRttyA
kAmaM mantrI kaviriva sadA khEdabhArairamuktaH || 16 ||

dUrAt-arthaM ghaTayati navaM dUrAtaH-ca-apa-SabdaM
tyaktvA bhUyO bhavati nirataH satsabhA-ranjanEshu |
mandaM mandaM racayati padaM lOka-citta-anuvRttyA
kAmaM mantrI kaviH-iva sadA khEda-bhAraiH-amuktaH || 16 ||

dUrAtaH-ca-apa-SabdaM - dUrAtaH-cApa-SabdaM (SlishTa)

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

दूरादर्थं घटयति नवं दूरातश्चापशब्दं
त्यक्त्वा भूयो भवति निरतः सत्सभारञ्जनेषु ।
मन्दं मन्दं रचयति पदं लोकचित्तानुवृत्त्या
कामं मन्त्री कविरिव सदा खेदभारैरमुक्तः ।। 16 ।।

दूरात्-अर्थं घटयति नवं दूरातः-च-अप-शब्दं
त्यक्त्वा भूयो भवति निरतः सत्सभा-रञ्जनेषु ।
मन्दं मन्दं रचयति पदं लोक-चित्त-अनुवृत्त्या
कामं मन्त्री कविः-इव सदा खेद-भारैः-अमुक्तः ।। 16 ।।

A minister gathers new wealth from far-off places, avoids the twang of bows (that indicates disputes). He is engrossed in pleasing the assembly of good people, takes slow and deliberate steps after the hearts (wishes) of people. He is never free from the burden of worry.
He is like the poet who puts together fresh meanings (or ideas) from various places, avoids inappropriate words, is engaged in delighting the assembly of good people and arranges every word carefully according to the hearts (tastes) of people.
(This verse is a Slesha or pun, where each phrase can be interpreted in two ways, to apply to the minister and the poet.)

(எங்ஙனம்) ஒரு கவி, தனது கவிதையில், எங்கெங்கிருந்தோ அழகிய சொற்களைக் கொணர்ந்து, கூடாத சொற்களை விலக்கி, உலக வழக்கிற்கேற்ப, தகுந்த சொற்களைக் கோர்த்து, கற்றோர் அவையினை எவ்வமயமும், மகிழ்விக்கும் பணியில் அக்கறையோடு இருப்பானோ, (அங்ஙனமே,) ஒரு மந்திரியும், போரில் ஈடுபடாமல், தூரத்தினின்று, புதுச் செல்வம் கொணர்ந்து, எவ்வமயமும் மேலார் அவையை மகிழ்விப்பதிலும், நாட்டு மக்களின் விருப்பத்திற்குகந்து, படிப்படியாக நடவடிக்கைகள் எடுப்பதிலும், எவ்வமயமும் அக்கறையோடு இருப்பான்.

இந்தச் செய்யுளின் சொற்களனைத்துமே, கவி, மந்திரி இருவருக்குமே பொருந்தும்படி, சிலேடையாக அமைக்கப்பட்டுள்ளன.

SlOka 17
paricaritavyAH santO yadyapi kathayanti nO sadupadESam |
yAstvEshAM svairakathAstA Eva bhavanti SAstrANi || 17 ||

yAstvEshAM – yAstEshAM

#(This SlOka is found in# saMskRta subhAshitEH)

परिचरितव्याः सन्तो यद्यपि कथयन्ति नो सदुपदेशम् ।
यास्त्वेषां स्वैरकथास्ता एव भवन्ति शास्त्राणि ।। 17 ।।

यास्त्वेषां - यास्तेषां

Good people should be served, even if they do not (explicitly) give good counsel. Even their spontaneous conversations provide guidelines to live.

சற்குணத்தோர், ஏதும் உபதேசம் செய்யாவிடினும், அவர்தம் சேவகம் செய்யத் தக்கதே. ஏனெனில், அவர்கள் சாதாரணமாகக் கூறும் சொற்களும் சாத்திரங்களாகுமே.

சற்குணத்தோர், பொதுவாக பேசும் சொற்கள் யாவுமே உபதேசம் போன்றதே எனப் பொருள்.

SlOka 18
prAyaH kandukapAtEnOtpatatyAryaH patannapi
tathA tvanAryaH patati mRtpiNDapatanaM yathA || 18 ||

tathA tvanAryaH patati mRtpiNDapatanaM yathA –
tathA patatyanAryastu mRtpiNDapatanaM tathA

prAyaH kanduka-pAtEna-utpatati-AryaH patannapi
tathA tu-anAryaH patati mRt-piNDa-patanaM yathA || 18 ||

प्रायः कन्दुकपातेनोत्पतत्यार्यः पतन्नपि
तथा त्वनार्यः पतति मृत्पिण्डपतनं यथा ।। 18 ।।

तथा त्वनार्यः पतति मृत्पिण्डपतनं यथा -
तथा पतत्यनार्यस्तु मृत्पिण्डपतनं तथा

प्रायः कन्दुक-पातेन-उत्पतति-आर्यः पतन्नपि
तथा तु-अनार्यः पतति मृत्-पिण्ड-पतनं यथा ।। 18 ।।

Generally, a high-minded man falls like a ball (and bounces back), but a lowly man falls like a clod of earth (not rising again).

பொதுவாக, நற்குடிமகன், வீழ்ந்தாலும், பந்துபோன்று, திரும்பவும் மேலெழுவான். இழிந்தவன் வீழ்வது களிமண் உருண்டை போலும் (மீண்டும் எழமாட்டான்).

SlOka 19
yadi nAma daivagatyA jagadasarOjaM kadAcidapi jAtam |
avakaranikaraM vikirati tatkiM kRkavAkuriva haMsaH || 19 ||

yadi nAma daiva-gatyA jagat-asarOjaM kadAcit-api jAtam |
avakara-nikaraM vikirati tat-kiM kRkavAkuH-iva haMsaH || 19 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

यदि नाम दैवगत्या जगदसरोजं कदाचिदपि जातम् ।
अवकरनिकरं विकिरति तत्किं कृकवाकुरिव हंसः ।। 19 ।।

यदि नाम दैव-गत्या जगत्-असरोजं कदाचित्-अपि जातम् ।
अवकर-निकरं विकिरति तत्-किं कृकवाकुः-इव हंसः ।। 19 ।।

If ever, by a turn of fate, the world became devoid of lotuses, would then a swan, like a rooster, scrape the garbage?

விதிவசத்தால், ஒருவேளை, உலகில் தாமரைகள் அற்றுப்போனால், அன்னமும், சேவல் போன்று குப்பை மேட்டினைக் கிளறுமோ?

குப்பையைக் கிளறுமோ அங்ஙனம் நேராதென.

SlOka 20
yannAgA madavAribhinnakaraTAstishThanti nidrAlasA
dvArE hEmavibhUshaNASca turagA valganti yaddarpitAH |
vINAvENumRdangaSankhapaTahaiH suptastu yadbOdhyatE
tatsarvaM suralOkadEvasadRSaM dharmasya visphUrjitam || 20 ||

madavAribhinnakara – madabhinnagaNDakara

yat-nAgA mada-vAri-bhinna-karaTAH-tishThanti nidrA-alasA
dvArE hEma-vibhUshaNAH-ca turagA valganti yat-darpitAH |
vINA-vENu-mRdanga-Sankha-paTahaiH suptaH-tu yat-bOdhyatE
tat-sarvaM sura-lOka-dEva-sadRSaM dharmasya visphUrjitam || 20 ||


यन्नागा मदवारिभिन्नकरटास्तिष्ठन्ति निद्रालसा
द्वारे हेमविभूषणाश्च तुरगा वल्गन्ति यद्दर्पिताः ।
वीणावेणुमृदङ्गशङ्खपटहैः सुप्तस्तु यद्बोध्यते
तत्सर्वं सुरलोकदेवसदृशं धर्मस्य विस्फूर्जितम् ।। 20 ।।

मदवारिभिन्नकर - मदभिन्नगण्डकर

यत्-नागा मद-वारि-भिन्न-करटाः-तिष्ठन्ति निद्रा-अलसा
द्वारे हेम-विभूषणाः-च तुरगा वल्गन्ति यत्-दर्पिताः ।
वीणा-वेणु-मृदङ्ग-शङ्ख-पटहैः सुप्तः-तु यत्-बोध्यते
तत्-सर्वं सुर-लोक-देव-सदृशं धर्मस्य विस्फूर्जितम् ।। 20 ।।

That sleepy, languid elephants with their temples riven by rut, stand at one’s door, and gold-bedecked, proud horses prance, and he is woken from sleep with the sounds of the Veena, flutes, drums, conches and tabors like the lord of the heavens – all this is the result of (the merit from) righteousness.

நெற்றிப் பிளவுகளினின்றும் மதமொழுகும் களிறு, தூக்கக் கலக்கத்துடன், வாயிலில் நிற்க, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் வாயிலில் கருவத்துடன் கனைத்து நிற்க, வீணை, குழல், மிருதங்கம், சங்கு மற்றும் மேளம் தூக்கத்தினின்றும் எழுப்ப - இத்தகைய தேவேந்திரனுக்கு நிகரான சிறப்புகள் யாவும் தருமத்தின் விளைவுகளே.

தருமத்தின் விளைவு – அறவழி நடப்பதனால்

SlOka 21
raktatvaM kamalAnAM satpurushANAM parOpakAritvam |
asatAM ca nirdayatvaM svabhAvasiddhaM trishu tritayam || 21 ||

raktatvaM kamalAnAM sat-purushANAM para-upakAritvam |
asatAM ca nirdayatvaM svabhAva-siddhaM trishu tritayam || 21 ||

#(This SlOka is found in# subhAshitAvali)

रक्तत्वं कमलानां सत्पुरुषाणां परोपकारित्वम् ।
असतां च निर्दयत्वं स्वभावसिद्धं त्रिषु त्रितयम् ।। 21 ।।

रक्तत्वं कमलानां सत्-पुरुषाणां पर-उपकारित्वम् ।
असतां च निर्दयत्वं स्वभाव-सिद्धं त्रिषु त्रितयम् ।। 21 ।।

Redness in lotuses, altruism in good men, and mercilessness in the wicked – these three are endowed by nature in the three.

தாமரை மலருக்கு, சிவப்பு நிறம், நன்மக்களுக்கு, பிறர்க்குதவும் தன்மை, தீயோருக்கு, தயவின்மை, மூன்றினுக்கும், இம்மூன்றும் (முறையே) இயற்கையில் அமைந்தவையாம்.

SlOka 22
vacOhi satyaM paramaM vibhUshaNaM
lajjAnganAyAH kRSatA kaTau ca
dvijasya vidyaiva punastathA kshamA
SIlaM hi sarvasya narasya bhUshaNam || 22 ||

lajjAnganAyAH – gajAnganAyAH

vacO-hi satyaM paramaM vibhUshaNaM
lajjA-anganAyAH kRSatA kaTau ca
dvijasya vidyA-Eva punaH-tathA kshamA
SIlaM hi sarvasya narasya bhUshaNam || 22 ||

वचोहि सत्यं परमं विभूषणं
लज्जाङ्गनायाः कृशता कटौ च
द्विजस्य विद्यैव पुनस्तथा क्षमा
शीलं हि सर्वस्य नरस्य भूषणम् ।। 22 ।।

लज्जाङ्गनायाः - गजाङ्गनायाः

वचो-हि सत्यं परमं विभूषणं
लज्जा-अङ्गनायाः कृशता कटौ च
द्विजस्य विद्या-एव पुनः-तथा क्षमा
शीलं हि सर्वस्य नरस्य भूषणम् ।। 22 ।।

Truthful words are the highest ornament (for one), modesty and slenderness of the middle are adornments for a woman. Learning and patience too are ornaments to the twice-born. Good conduct is an ornament to all men.

வாக்கிலே உண்மை மிக்குயர்ந்த அணிகலன். நாணமும், சிற்றிடையும் பெண்ணுக்கு அணிகலன். கல்வியும், பொறுமையும் அந்தணருக்கு அணிகலன். நற்பண்பே அனைத்து மக்களுக்கும் அணிகலன்.

SlOka 23
priyasakhi vipaddaNDAghAtaprapAtaparamparA-
paricayacalE cintAcakrE nidhAya vidhiH khalaH |
mRdamiva balAtpiNDIkRtya pragalbhakulAlavad-
bhramayati manO nO jAnImaH kimatra vidhAsyati || 23 ||

priya-sakhi vipad-daNDa-AghAta-prapAta-paramparA-
paricaya-calE cintA-cakrE nidhAya vidhiH khalaH |
mRdam-iva balAt-piNDI-kRtya pragalbha-kulAlavad-
bhramayati manO nO jAnImaH kim-atra vidhAsyati || 23 ||

प्रियसखि विपद्दण्डाघातप्रपातपरम्परा-
परिचयचले चिन्ताचक्रे निधाय विधिः खलः ।
मृदमिव बलात्पिण्डीकृत्य प्रगल्भकुलालवद्-
भ्रमयति मनो नो जानीमः किमत्र विधास्यति ।। 23 ।।

प्रिय-सखि विपद्-दण्ड-आघात-प्रपात-परम्परा-
परिचय-चले चिन्ता-चक्रे निधाय विधिः खलः ।
मृदम्-इव बलात्-पिण्डी-कृत्य प्रगल्भ-कुलालवद्-
भ्रमयति मनो नो जानीमः किम्-अत्र विधास्यति ।। 23 ।।

O Dear friend! Evil fate, like an expert potter, rolls up our mind like a ball of clay, places it on the wheel of anxiety which moves coming in contact with a series of strokes from the stick of misfortune and whirls it. We know not what he will fashion (from it).

இனியவளே! கொடிய விதியெனும், திறமை வாய்ந்த குயவன், மனமெனும் களிமண்ணை, வலிதே உருண்டை செய்து, கவலையெனும் திகிரிகையிலிட்டு, விபத்தெனும் கழியினால் அடித்தடித்து, சுழற்றிக் கொண்டேயிருக்கின்றானே. விதி என்ன செய்யுமோ, அறிந்திலேனே!

என்ன செய்யுமோ – என்ன பாண்டம் செய்யுமோவென.

SlOka 24
virama virasAyAsAdasmAdduradhyavasAyatO
vipadi mahatAM dhairyadhvaMsaM yadIkshitumIhasE |
ayi jaDamatE kalpApAyE vyapEtanijakramAH
kulaSikhariNaH kshudrA naitE na vA jalarASayaH || 24 ||

yadIkshitumIhasE - yadISitumIhasE
jaDamatE kalpApAyE - jaDavidhE kalpApAya

virama virasa-AyAsAd-asmAd-duradhyavasAyatO
vipadi mahatAM dhairya-dhvaMsaM yad-Ikshitum-IhasE |
ayi jaDamatE kalpa-apAyE vyapEta-nija-kramAH
kula-SikhariNaH kshudrA na-EtE na vA jala-rASayaH || 24 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

विरम विरसायासादस्माद्दुरध्यवसायतो
विपदि महतां धैर्यध्वंसं यदीक्षितुमीहसे ।
अयि जडमते कल्पापाये व्यपेतनिजक्रमाः
कुलशिखरिणः क्षुद्रा नैते न वा जलराशयः ।। 24 ।।

यदीक्षितुमीहसे - यदीशितुमीहसे
जडमते कल्पापाये - जडविधे कल्पापाय

विरम विरस-आयासाद्-अस्माद्-दुरध्यवसायतो
विपदि महतां धैर्य-ध्वंसं यद्-ईक्षितुम्-ईहसे ।
अयि जडमते कल्प-अपाये व्यपेत-निज-क्रमाः
कुल-शिखरिणः क्षुद्रा न-एते न वा जल-राशयः ।। 24 ।।

O dull-witted man! Desist from this ill-advised, unpleasant task of wanting to see the steadfastness of great men crumble in adversity. They are not the lowly Kula mountains, or oceans which transgress their bounds during the apocalypse.

ஏ முட்டாளே! மேன்மக்கள், இடுக்கண் நேர்கையில் தமது நெஞ்சுரத்தினை இழந்து விடுவார்களென்று எண்ணி நோக்குவாயாகில், அது வீணான செயல். அதனைக் கைவிடுவாய். ஊழிக் காலத்தில், புவியைத் தாங்கும் குலகிரியும், ஆழம்காண இயலா பெருங்கடலும் தங்கள் வரம்பை மீறுகின்றன. இவைகளைப் போன்று இழிந்ததல்ல மேன்மக்களின் நெஞ்சுரம்.

குலகிரி முதலான எட்டு மலைகள் புவியினைத் தாங்குவதாக கருதப்படுகின்றது.

SlOka 25
spRhayati bhujayOrantaramAyatakaravAlakararuhavidIrNam |
vijayaSrIrvIrANAM vyutpannaprauDhavanitEva || 25 ||

spRhayati bhujayOH-antaram-Ayata-karavAla-kara-ruha-vidIrNam |
vijaya-SrIH-vIrANAM vyutpanna-prauDha-vanitA-iva || 25 ||

#(This SlOka is found in# subhAshita ratna bhaNDAgAraM)

स्पृहयति भुजयोरन्तरमायतकरवालकररुहविदीर्णम् ।
विजयश्रीर्वीराणां व्युत्पन्नप्रौढवनितेव ।। 25 ।।

स्पृहयति भुजयोः-अन्तरम्-आयत-करवाल-कर-रुह-विदीर्णम् ।
विजय-श्रीः-वीराणां व्युत्पन्न-प्रौढ-वनिता-इव ।। 25 ।।

The goddess of victory likes the chest of warriors wounded with a long sword, just as a skillful, confident woman desires the chest of a brave man marked by (her) long nails.

எங்ஙனம் கைதேர்ந்த, பழகிய அழகி, (தனது) வாள் நிகர், கூரிய நகக் கீரல்கள் பதிந்த, வீரனின் (காதலனின்) மார்பினை விரும்புவாளோ, அங்ஙனமே, வெற்றிமடந்தையும், கூரிய வாள் துளைத்த வீரனின் மார்பினையே விரும்புகின்றாள்.
    
வெற்றி மடந்தை – வீர லக்ஷ்மி அல்லது விஜய லக்ஷ்மி


No comments:

Post a Comment