nIti SatakaM 91 – 100 - नीति शतकं – 91 – 100
SlOka 91
bhagnASasya karaNDapIDitatanOrmlAnEndriyasya kshudhA
kRtvAkhurvivaraM svayaM nipatitO naktaM mukhE bhOginaH
|
tRptastatpiSitEna satvaramasau tEnaiva yAtaH pathA
lOkAH paSyata
daivamEva hi nRNAM vRddhau kshayE kAraNam || 91 ||
pIDita – piNDita
bhagna-ASasya karaNDa-pIDita-tanOH-mlAna-indriyasya
kshudhA
kRtvA-AkhuH-vivaraM svayaM nipatitO naktaM mukhE
bhOginaH |
tRptaH-tat-piSitEna satvaram-asau tEna-Eva yAtaH pathA
lOkAH paSyata
daivam-Eva hi nRNAM vRddhau kshayE kAraNam || 91 ||
भग्नाशस्य करण्डपीडिततनोर्म्लानेन्द्रियस्य क्षुधा
कृत्वाखुर्विवरं स्वयं निपतितो नक्तं मुखे भोगिनः ।
तृप्तस्तत्पिशितेन सत्वरमसौ तेनैव यातः पथा
लोकाः पश्यत
दैवमेव हि नृणां वृद्धौ क्षये कारणम् ।। 91 ।।
पीडित - पिण्डित
भग्न-आशस्य करण्ड-पीडित-तनोः-म्लान-इन्द्रियस्य
क्षुधा
कृत्वा-आखुः-विवरं स्वयं निपतितो नक्तं मुखे भोगिनः ।
तृप्तः-तत्-पिशितेन सत्वरम्-असौ तेन-एव यातः पथा
लोकाः पश्यत
दैवम्-एव हि नृणां वृद्धौ क्षये कारणम् ।। 91 ।।
A mouse,
making a hole in a basket at night, fell into the mouth of a despairing serpent
whose body was constricted in the basket and limbs weak with hunger. Sated with
its meat, the serpent quickly exited through the same way. O people! See, it is fate that causes men’s
rise and fall.
அரவமொன்று
கூடைக்குள் வீழ்ந்து, வெளியேற முடியாமல், பசியினால் வாடி, உடல் இளைத்து,
நம்பிக்கையிழந்து, சுருண்டு கிடந்தது. எலியொன்று, இரவில், அக்கூடையைக் கடித்து,
ஓட்டை செய்து, (நேராக) அந்த அரவத்தின் வாயினுள், தானே
வீழ்ந்தது. அரவம், அந்த எலியைக் கொன்று, அதன் இறைச்சியைத் தின்று, அதே ஓட்டை
வழியாக, விரைவாக வெளியேறியது. காணீர், உலகோரே, மனிதனின் உயர்ச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் விதியே காரணம்.
நம் செயல்கள்,
சில நேரங்களில், நாம் எதிர்பார்க்காத விளைவுகளை உண்டாக்குகின்றது. அதனைத்தான் விதியென்று
கூறப்பட்டுள்ளது. எலியின் சாவுக்கும், அரவம் உயிர் பிழைத்ததற்கும், வேறு காரணம்
கூற இயலாது.
SlOka 92
kAryAyattaM phalaM puMsAM buddhiH karmAnusAriNI |
tathApi sudhiyA bhAvyaM suvicAryaiva kurvatA || 92 ||
kAryAyattaM – karmAyattaM
kArya-AyattaM phalaM puMsAM buddhiH karma-anusAriNI |
tathA-api sudhiyA bhAvyaM suvicArya-Eva kurvatA || 92
||
कार्यायत्तं फलं पुंसां बुद्धिः कर्मानुसारिणी ।
तथापि सुधिया भाव्यं सुविचार्यैव कुर्वता ।। 92 ।।
कार्यायत्तं - कर्मायत्तं
कार्य-आयत्तं फलं पुंसां बुद्धिः कर्म-अनुसारिणी ।
तथा-अपि सुधिया भाव्यं सुविचार्य-एव कुर्वता ।। 92 ।।
The results which men get, depend on (prior)
actions. The intellect also acts according to (prior) actions. Even then, a
wise man should do anything only after weighing it carefully.
செயலுக்குகந்தே
மனிதருக்குப் பயன் கிடைக்கும், முன்வினைக்குகந்தே பகுத்தறிவும் இயங்கும். ஆயினும்,
அறிவாளி நன்கு ஆராய்ந்த பின்னரே செயல்பட வேண்டும்.
SlOka 93
khalvATO divasESvarasya kiraNaiH santApitO mastakE
vAnchandESamanAtapaM vidhivaSAttAlasya mUlaM gataH |
tatrApyasya mahAphalEna patatA bhagnaM saSabdaM SiraH
prAyO gacchati yatra bhAgyarahitastatraiva yAntyApadaH
|| 93 ||
tatrApyasya mahAphalEna – tatrOccairmahatA phalEna
tatraiva yAntyApadaH – tatrApadAM bhAjanam
khalvATO divasa-ISvarasya kiraNaiH santApitO mastakE
vAnchan-dESam-anAtapaM vidhi-vaSAt-tAlasya mUlaM gataH
|
tatra-api-asya mahA-phalEna patatA bhagnaM saSabdaM
SiraH
prAyO gacchati yatra bhAgya-rahitaH-tatra-Eva
yAnti-ApadaH || 93 ||
खल्वाटो दिवसेश्वरस्य किरणैः सन्तापितो मस्तके
वाञ्छन्देशमनातपं विधिवशात्तालस्य मूलं गतः ।
तत्राप्यस्य महाफलेन पतता भग्नं सशब्दं शिरः
प्रायो गच्छति यत्र भाग्यरहितस्तत्रैव यान्त्यापदः ।।
93 ।।
तत्राप्यस्य महाफलेन - तत्रोच्चैर्महता फलेन
तत्रैव यान्त्यापदः - तत्रापदां भाजनम्
खल्वाटो दिवस-ईश्वरस्य किरणैः सन्तापितो मस्तके
वाञ्छन्-देशम्-अनातपं विधि-वशात्-तालस्य मूलं गतः ।
तत्र-अपि-अस्य महा-फलेन पतता भग्नं सशब्दं शिरः
प्रायो गच्छति यत्र भाग्य-रहितः-तत्र-एव यान्ति-आपदः
।। 93 ।।
A bald man, tormented by the sun’s
rays (falling) on his head, seeking a shaded place, reached the foot of a palm
tree by chance. There again, his head was split loudly by a falling big
fruit. Misfortunes generally follow a
luckless man wherever he goes.
வழுக்கையன்,
தலையில் சூரியக் கதிர்களின் சூட்டினால் பீடிக்கப்பட்டு, நிழலான இடம் தேடி,
விதிவசமாக பனை மரத்தடியில் சென்றான். அங்கும் அவன் தலையில் பெரிய பனம் பழமொன்று
வீழ்ந்து, பேரோசையோடு, அவன் மண்டை உடைந்தது. அதிருஷ்டம் இல்லாதவன், எங்கு
சென்றாலும், ஆபத்து அவனுக்கு முன் செல்கின்றது.
SlOka 94
SaSidivAkarayOrgrahapIDanaM gajabhujaMgamayOrapi
bandhanam |
matimatAM ca vilOkya daridratAM vidhirahO balavAniti
mE matiH || 94 ||
SaSidivAkara – raviniSAkara
SaSi-divAkarayOH-graha-pIDanaM gaja-bhujaMgamayOH-api
bandhanam |
mati-matAM ca vilOkya daridratAM vidhiH-ahO
balavAn-iti mE matiH || 94 ||
शशिदिवाकरयोर्ग्रहपीडनं गजभुजंगमयोरपि बन्धनम् ।
मतिमतां च विलोक्य दरिद्रतां विधिरहो बलवानिति मे
मतिः ।। 94 ।।
शशिदिवाकर - रविनिशाकर
शशि-दिवाकरयोः-ग्रह-पीडनं गज-भुजंगमयोः-अपि बन्धनम् ।
मति-मतां च विलोक्य दरिद्रतां विधिः-अहो बलवान्-इति
मे मतिः ।। 94 ।।
Seeing the eclipse of the sun and
the moon by the planet Rahu, the captivity of the elephant and the snake and
the poverty of intelligent people, my conclusion is: Oh, Fate is mighty!
சந்திர,
சூரியர்களின் கிரகணமும், யானை மற்றும் அரவத்தின் கட்டும், அறிவாளிகளின் வறுமையும்
கண்டு, ஐயகோ! விதியே வலிமை வாய்ந்ததென நான் கருதுகின்றேன்.
சந்திர
சூரியர்கள், ராகு கிரகத்தினால் மறைக்கப்படுவதனால், கிரகணம் ஏற்படுகின்றதென முன்னம்
கருதப்பட்டது.
வலிமை கொண்ட
யானையையும், கொடிய நச்சரவத்தினையும் மனிதன் கட்டிப் போடுகின்றான்.
SlOka 95
sRjati tAvadaSEshaguNAkaraM purusharatnamalankaraNaM
bhuvaH |
tadapi tatkshaNabhangi karOti cEdahaha
kashTamapaNDitatA vidhEH || 95 ||
sRjati tAvad-aSEsha-guNAkaraM
purusha-ratnam-alankaraNaM bhuvaH |
tat-api tat-kshaNa-bhangi karOti cEd-ahaha
kashTam-apaNDitatA vidhEH || 95 ||
सृजति तावदशेषगुणाकरं पुरुषरत्नमलङ्करणं भुवः ।
तदपि तत्क्षणभङ्गि करोति चेदहह कष्टमपण्डितता विधेः
।। 95 ।।
सृजति तावद्-अशेष-गुणाकरं पुरुष-रत्नम्-अलङ्करणं भुवः
।
तत्-अपि तत्-क्षण-भङ्गि करोति चेद्-अहह
कष्टम्-अपण्डितता विधेः ।। 95 ।।
Having created a gem of a man, an adornment to the
earth and a repository of all virtues, yet if the Creator makes him
short-lived, alas, woe to His indiscretion.
முதலில், புவியினுக்கோர்
அணிகலனென, அனைத்து நற்பண்புகளும் உடைத்த, ஓர் மனிதருள் மாணிக்கத்தினை, படைக்கின்றான். அதன் பின்னர், அவனை, அப்போதே அழிப்பானேயாகில், ஐயகோ! கொடிது விதியின்
மடமை!
அப்போதே –
மனிதருள் மாணிக்கமெனத் திகழ்கையில் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, அது மனிதனின்
குறுகிய ஆயுட்காலத்தினைக் குறிக்கலாம்.
விதி என்பது
படைக்கும் பிரமனையும், ஊழ்வினையையும் குறிக்கும்.
SlOka 96
ayamamRtanidhAnaM nAyakOpyOshadhInAM
SatabhishaganuyAtaH SambhumUrdhOvataMsaH |
virahayati na cainaM rAjayakshmA SaSAnkaM
hatavidhiparipAkaH kEna vA langhanIyaH || 96 ||
ayam-amRta-nidhAnaM nAyakaH-api-OshadhInAM
Satabhishak-anuyAtaH Sambhu-mUrdha-avataMsaH |
virahayati na ca-EnaM rAja-yakshmA SaSAnkaM
hata-vidhi-paripAkaH kEna vA langhanIyaH || 96 ||
अयममृतनिधानं नायकोप्योषधीनां
शतभिषगनुयातः शम्भुमूर्धोवतंसः ।
विरहयति न चैनं राजयक्ष्मा शशाङ्कं
हतविधिपरिपाकः केन वा लङ्घनीयः ।। 96 ।।
अयम्-अमृत-निधानं नायकः-अपि-ओषधीनां
शतभिषक्-अनुयातः शम्भु-मूर्ध-अवतंसः ।
विरहयति न च-एनं राज-यक्ष्मा शशाङ्कं
हत-विधि-परिपाकः केन वा लङ्घनीयः ।। 96 ।।
Consumption does not leave the
moon, though he is the repository of nectar, the lord of medicinal herbs,
followed by Satabhisak (a hundred physicians, a constellation by the name) and
the crown-jewel of Shiva. By whom can the miserable effects of fate be
overcome?
மதி, அமுதத்தின்
உறைவிடமாயினும், ஔடதங்களுக்கெல்லாம் தலைவனாயினும், (நூறு மருத்துவர்
எனப்படும்) சதயமெனும் தாரைக் கூட்டத்தினால் தொடரப்பட்டாலும்,
சிவனின் தலையணிகலனாகத் திகழ்ந்தாலும், அவனையும் தேய்மானம் விடுவதில்லை. ஊழ்வினை
நியமித்ததை யாரால்தான் மீற இயலும்?
மதியினுக்கு
சோமன் என்றும் பெயர். சோமன் எனும் யாகத்தில் அமுதம் பெறப்படுவதாக.
இரவின்
தண்மதியில் ஔடதங்கள் வளர்வதாகக் கருதப்படும்.
சதயம் என்பது
வடமொழியில் சதபிஷக் எனப்படும். அது நூறு தாரைகளின் கூட்டமாகும் (constellation) அந்த நூறும் மருத்துவர்களெனப்படும்.
இத்தனை வலிமைகள்
படைத்திருந்தும், மதி தேய்வடைவது ஊழ்வினையே
SlOka 97
daivEna prabhuNA svayaM jagati yadyasya pramANIkRtaM
tattasyOpanamEnmanAgapi mahAnnaivASrayaH kAraNam |
sarvASAparipUrakE jaladharE varshatyapi pratyahaM
sUkshmA Eva patanti cAtakamukhE dvitrAH payObindavaH
|| 97 ||
daivEna prabhuNA svayaM jagati yat-yasya pramANI-kRtaM
tat-tasya-upanamEt-manAk-api mahAn-na-Eva-ASrayaH
kAraNam |
sarva-ASA-paripUrakE jala-dharE varshati-api pratyahaM
sUkshmA Eva patanti cAtaka-mukhE dvitrAH
payaH-bindavaH || 97 ||
दैवेन प्रभुणा स्वयं जगति यद्यस्य प्रमाणीकृतं
तत्तस्योपनमेन्मनागपि महान्नैवाश्रयः कारणम् ।
सर्वाशापरिपूरके जलधरे वर्षत्यपि प्रत्यहं
सूक्ष्मा एव पतन्ति चातकमुखे द्वित्राः पयोबिन्दवः ।।
97 ।।
दैवेन प्रभुणा स्वयं जगति यत्-यस्य प्रमाणी-कृतं
तत्-तस्य-उपनमेत्-मनाक्-अपि महान्-न-एव-आश्रयः कारणम्
।
सर्व-आशा-परिपूरके जल-धरे वर्षति-अपि प्रत्यहं
सूक्ष्मा एव पतन्ति चातक-मुखे द्वित्राः पयः-बिन्दवः ।।
97 ।।
Whatever is allotted to one by
the powerful Fate, only that comes one’s way. Not even a great patron can be
the cause (for more). Even though the cloud showers every day, fulfilling everyone’s
wishes, only a few tiny drops of water fall into the Chataka’s mouth.
எல்லாம் வல்ல
ஊழ்வினை, உலகில் யாருக்கு என்னவென்று, தானே நிர்ணயித்துள்ளதோ, அது அவனை
அடையும். (நாம் அடையப் பெறுவது எதுவும்,) எந்த பெரும் ஆதரவினாலும் அல்ல. அனைவரின் விருப்பத்தினையும் நிறைவு
செய்யும் மழை முகில், நாளும் மழை பொழிந்தாலும், இரண்டு அல்லது மூன்று சிறு துளிகளே
சாதகப் பறவையின் வாயில் விழுகின்றனவன்றோ!
அடையப் பெறுவது –
எத்தகைய பெரிய ஆதரவினாலும் நமக்கு ஏதும் கிடைப்பதில்லை – ஊழ்வினையே காரணமென.
SlOka 98
patraM naiva yadA karIraviTapE dOshO vasantasya kiM
nOlUkO(a)pyavalOkatE yadi divA sUryasya kiM dUshaNam |
dhArA naiva patanti cAtakamukhE mEghasya kiM dUshaNam
yatpUrvaM vidhinA lalATalikhitaM tanmArjituM kaH
kshamaH || 98 ||
patraM na-Eva yadA karIra-viTapE dOshO vasantasya kiM
na-ulUkaH-api-avalOkatE yadi divA sUryasya kiM
dUshaNam |
dhArA na-Eva patanti cAtaka-mukhE mEghasya kiM
dUshaNam
yat-pUrvaM vidhinA lalATa-likhitaM tat-mArjituM kaH
kshamaH || 98 ||
पत्रं नैव यदा करीरविटपे दोषो वसन्तस्य किं
नोलूकोऽप्यवलोकते यदि दिवा सूर्यस्य किं दूषणम् ।
धारा नैव पतन्ति चातकमुखे मेघस्य किं दूषणम्
यत्पूर्वं विधिना ललाटलिखितं तन्मार्जितुं कः क्षमः
।। 98 ।।
पत्रं न-एव यदा करीर-विटपे दोषो वसन्तस्य किं
न-उलूकः-अपि-अवलोकते यदि दिवा सूर्यस्य किं दूषणम् ।
धारा न-एव पतन्ति चातक-मुखे मेघस्य किं दूषणम्
यत्-पूर्वं विधिना ललाट-लिखितं तत्-मार्जितुं कः
क्षमः ।। 98 ।।
When the Karira tree’s branch has no leaf, what is
the fault of the spring? If the owl does not see by day, what guilt is there on
the Sun’s part? If the shower does not fall into the mouth of the Chataka, what
is the cloud’s fault? Who can erase what is written on one’s forehead by Fate
beforehand.
குழலாதொண்டைப்
புதரில் இலையே இல்லையெனில், இளவேனிலின் குற்றமென்ன? ஆந்தையும் பகலில்
பார்க்கமுடியாதாகில், பகலவனின் குற்றமென்ன? மழை நீர், சாதகப்
பறவையின் வாயில் விழாமற்போனால், முகிலின் குற்றமென்ன? முன்னம்
விதியினால் நெற்றியில் எழுதப்பட்டதை யாரால் அழிக்க இயலும்?
குழலாதொண்டை –
சீமைக் கருவேலம் போன்ற முட்புதர்
விதி – ஊழ்வினை
SlOka 99
namasyAmO dEvAnnanu hatavidhEstE(a)pi vaSagA
vidhirvandyaH sO(a)pi pratiniyatakarmaikaphaladaH |
phalaM karmAyattaM kimamaragaNaiH kiM ca vidhinA
namastatkarmabhyO vidhirapi na yEbhyaH prabhavati ||
99 ||
kimamaragaNaiH - yadi kimamaraiH
namasyAmO dEvAn-nanu hata-vidhEH-tE-api vaSagA
vidhiH-vandyaH saH-api prati-niyata-karma-Eka-phaladaH
|
phalaM karma-AyattaM kiM-amara-gaNaiH kiM ca vidhinA
namaH-tat-karmabhyO vidhiH-api na yEbhyaH prabhavati
|| 99 ||
नमस्यामो देवान्ननु हतविधेस्तेऽपि वशगा
विधिर्वन्द्यः सोऽपि प्रतिनियतकर्मैकफलदः ।
फलं कर्मायत्तं किममरगणैः किं च विधिना
नमस्तत्कर्मभ्यो विधिरपि न येभ्यः प्रभवति ।। 99 ।।
किममरगणैः - यदि किममरैः
नमस्यामो देवान्-ननु हत-विधेः-ते-अपि वशगा
विधिः-वन्द्यः सः-अपि प्रति-नियत-कर्म-एक-फलदः ।
फलं कर्म-आयत्तं किं-अमर-गणैः किं च विधिना
नमः-तत्-कर्मभ्यो विधिः-अपि न येभ्यः प्रभवति ।। 99 ।।
We would salute the gods, but they
too are under the control of accursed Fate. Brahma is venerable, yet, He too,
gives only the results assigned to each action. Results depend on action. So
what is the use of gods and Brahma? Salutations to that action, Karma, which
even Brahma cannot overpower.
தேவர்களைத்
தொழுவோம், ஆயின் அவர்களும் விதிவசப்பட்டவர்களே. எனவே, விதியே தொழத்தக்கது. ஆனால்
விதியும், வினைக்குத் தகுந்த பயனையே வழங்குகின்றது. பயன் வினைக்கு ஏற்பதாகில்,
தேவர்கள்தான் எதற்கு? விதியும் எதற்கு? விதியும்
கட்டுதற்கு இயலாத, அந்த வினைகளையே வணங்கினோம்.
விதி – படைக்கும்
பிரமனைக் குறிக்கும் – ஊழ்வினையல்ல
வினை – கரும வினை
- நாம் இயற்றும் கருமங்களின்படியே நமது ஊழ்வினை அமையும். அதனை விதியினாலும் மாற்றி
எழுத இயலாதென.
ஆனால், கீதையில்
உரைத்தபடி, பயனை எதிர்நோக்காது அனைத்து கருமங்களையும் நாம் செய்வோமேயாகில் –
அதாவது பயனை இறைவனுக்கு அர்ப்பணிப்போமேயாகில், அந்தக் கருமமும் மனிதரைக் கட்டாது.
கருமங்களே உயர்ந்ததென்று இறுமாந்திருந்த முனிவர்களுக்குப் பாடம் புகட்டவே சிவன்
ஆண்டிக் கோலத்தில் (பிட்சாடனராக)
வந்தாரென புராணங்கள் கூறும்.
SlOka 100
brahmA yEna kulAlavanniyamitO brahmANDabhANDOdarE
vishNuryEna daSAvatAragahanE kshiptO mahAsankaTE |
rudrO yEna kapAlapANipuTakE bhikshATanaM kAritaH
sUryO bhrAmyati nityamEva gaganE tasmai namaH karmaNE
|| 100 ||
brahmA yEna kulAlavat-niyamitO brahmANDa-bhANDa-udarE
vishNuH-yEna daSa-avatAra-gahanE kshiptO mahA-sankaTE
|
rudrO yEna kapAla-pANi-puTakE bhikshA-aTanaM kAritaH
sUryO bhrAmyati nityam-Eva gaganE tasmai namaH karmaNE
|| 100 ||
ब्रह्मा येन कुलालवन्नियमितो ब्रह्माण्डभाण्डोदरे
विष्णुर्येन दशावतारगहने क्षिप्तो महासङ्कटे ।
रुद्रो येन कपालपाणिपुटके भिक्षाटनं कारितः
सूर्यो भ्राम्यति नित्यमेव गगने तस्मै नमः कर्मणे ।। 100 ।।
ब्रह्मा येन कुलालवत्-नियमितो ब्रह्माण्ड-भाण्ड-उदरे
विष्णुः-येन दश-अवतार-गहने क्षिप्तो महा-सङ्कटे ।
रुद्रो येन कपाल-पाणि-पुटके भिक्षा-अटनं कारितः
सूर्यो भ्राम्यति नित्यम्-एव गगने तस्मै नमः कर्मणे
।। 100 ।।
Salutations to that Order or
Karma, by which Brahma is restricted as a potter inside the vessel-like
Universe, by which Vishnu was thrown to the very perilous depths of the ten
incarnations, by which Rudra was made to wander for alms with a skull in his
palm, and by which the sun roams the sky incessantly.
பிரமனோ, ஓர்
குயவனைப் போன்று, நியமிக்கப்பட்டபடி, பேரண்டமெனும் பாண்டத்தினுள் (வயிற்றில்) உள்ளான். விஷ்ணுவோ, பத்து அவதாரங்களெடுத்து, பேரிடரினால் ஒளிந்துள்ளான்.
உருத்திரனோ, மண்டையோட்டைக் கையிலேந்தி, பிச்சையெடுக்கின்றான். சூரியனோ, நாளும் ஆகாயத்தில்
சுற்றுகின்றான். எனவே, இவை யாவற்றிற்கும் காரணமான கருமத்தினை வணங்கினோம்.
இவ்வுலகம்,
சீராகவும், ஒழுங்கினைக் கடைப்பிடித்தும் இயங்குகின்றது. இதனை வடமொழியில் ரித (Rhythm) என்று கூறப்படும். இந்த ஒழுங்கினைத் தான் கருமமென இந்த செய்யுளில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment